இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவதனை எதிர்த்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 50 பேரைக் கொண்ட குழு ஒன்றினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் போதியளவில் இல்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்குவதற்கான நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் உரிய முறையில் பூர்த்தி செய்யவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கைக்கு இந்த சலுகைத் திட்டத்தை வழங்கக்கூடாது எனக் கோரியே குறித்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்காதிருத்தல், மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டு சுமத்தியோருக்கு தண்டனை விதிக்காமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.