சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு ராஜதந்திர உயர் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ இவ்வாறு உயர் ராஜதந்திர பதவியொன்றை வழங்கியுள்ளார். 2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ வெற்றியீட்டியதனைத் தொடர்ந்து, அந்தப் பதவி வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொலை குறித்த புதிய ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றதனைத் தொடர்ந்து இவ்வாறு பதவி வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.தாய்லாந்துக்கான இலங்கைத் தூதரகத்தில் கடமையாற்றிய புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தரே இவ்வாறு லசந்த கொலையுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.