மீத்தொட்டமுல்ல குப்பைமேட்டு அனர்த்தத்துக்கு காரணமான விடயங்கள் மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான சம்பவம் ஏற்படுவதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விதந்துரைப்பதற்காக வருகைதந்த ஜப்பானிய நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று (24) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரதிநிதிகள் குழுவின் தலைவரான Mitsutake Numahata அறிக்கையை ஜனாதிபதியிடம் வழங்கி தமது விதந்துரைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார்.
குறித்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான குறுங்கால நடவடிக்கையாக குப்பைமேட்டின் அடித்தளத்தை பலப்படுத்தி பொலித்தீனால் மூடுதல் மற்றும் அடுத்த மழை காலத்துக்கு முன்னதாக குப்பை மேட்டின் அமைப்பை மலைபோன்ற வடிவத்திற்கு மாற்றி ஈர்ப்புச் சக்திக்கமைய உருவாக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டது.
குப்பைமேட்டின் அளவை படிப்படியாக குறைத்து மீள்சுழற்சி, மின்சக்தி உற்பத்தி மற்றும் இயற்கை உர உற்பத்திக்காகவும் பயன்படுத்துவது நீண்டகால விதந்துரையாக முன்வைக்கப்பட்டது.