இந்தியாவிலுள்ள கடற்படைத் தளம் ஒன்றில் இடம் பெற்ற பயிற்சி ஒன்றின் போது, இலங்கைக் கடற்படை வீரர் ஒருவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கை கடற்படை வீரர் வை.பி.என்.ஆர். வீரசிங்க என்பர் நீழ்மூழ்கி பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது நேற்றையதினம் மரணமடைந்ததாக இந்தியக் கடற்படை அறிவித்துள்ளது.
அரபிக் கடற் பகுதிக் கடற்படைத் தளத்தில் பயிற்சி இடம் பெற்றுக்கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது வழக்கமான ஒரு பயிற்சியாக இருந்த போதிலும் குறித்த ; கடற்படை வீரரே மூச்சு திணறி மரணம் அடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரசிங்க, நீண்ட நேரமாக வெளியே வராததால் இந்தியக் கடற்படையினர் நீரில் குதித்து அவரை மீட்டு முதலுதவியும் அளிக்கப்பட்ட பின்னர் கடற்படை மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். எனினும் அங்கு அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர் னர்.
கடந்த 3ஆம் திகதி முதல் இலங்கையைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் இந்தப் பயிற்சியில் பங்குபற்றி வருகின்ற நிலையில் இந்த மரணம் குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த திடீர் மரணம் குறித்து விசாரணையை நடத்துவதற்காக இந்தியக் கடற்படை விசாரணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளது.