191
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகமும், கலாசார பேரவையின் திரைப்பட கல்லூரியால் நடத்தப்பட்ட குறும் படம் மற்றும் புகைப்பட பயிற்சிகளை முடித்துக்கொண்டவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.இந்நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
ஆறுமாத காலமாக புகைப்படம் மற்றும் குறும்பட துறைகளில் பயிற்சிகளையும், செயலமர்வுகளையும் பெற்றுக்கொண்டவர்கள் தங்களுடைய செயல் திட்டங்களாக நான்கு வகையான 36 குறும் படங்களையும், ஒரு கவிதை ஒளி நாடாவும் தயாரித்துள்ளனர். இவை அனைத்தும் அண்மையில் இடம்பெற்ற கலாசார விழாவில் வெளியீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வேல்ட் விசன் நிறுவனத்தின் அணுசரனையில் மேற்படி பயிற்சி நெறிகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலாளர் கோ. நாகேஸ்வரன், வேல்ட் விசன் நிறுவன நிறைவேற்று அதிகாரி, பிரதேச செயலக திட்டப்பணிப்பாளர், காவேரி கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை யோசுவா மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Spread the love