முதலில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் எதிர்நோக்கும் முதலாவது தேர்தல் சர்வஜன வாக்கெடுப்பாகவே அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனம் அமைப்பது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் புதிய அரசியல் சாசனம் குறித்த யோசனை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதென தெரிவித்துள்ளார். சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டதன் பின்னர் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் எனவும் அமைச்சர் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அனைத்து உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களையும், அனைத்து மாகாணசபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடாத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்