சிலியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் காண்டியாகோவில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வல்பாறைசோ நகரை மையமான கொண்டு உருவாகிய இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டரர் அளவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக காண்டியாகோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வெளிகளில் தஞசமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக வல்பாறைசோ கடலில் வழக்கத்துக்கு மாறாக உயரமான அலைகள் எழுந்தமையால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கத்தால் உயிர் மற்றும் பொருள் இழப்புகள் குறித்து தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை என சிலி ஜனாதிபதி மைக்கேல் பேச்லெட் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment