யுத்தத்தில் உயிர் நீத்த மற்றும் அங்கவீனமுற்ற முப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் பிள்ளைகளுக்காக பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் வருடாந்தம் வழங்கப்படும் ‘ரணவிரு தூதரு’ புலமைப்பரிசில் திட்டத்தின் 15 மற்றும் 16வது கட்டங்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
80 படைவீரர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், தரம் 01 முதல் தரம் 05 வரையான 25 பிள்ளைகளுக்கு தலா 20,000 ரூபாவும், தரம் 06 முதல் தரம் 08 வரையான 27 பிள்ளைகளுக்கு 30,000 ரூபாவும் தரம் 09 முதல் உயர் தரம் வரையிலான 30 பிள்ளைகளுக்கு 50,000 ரூபாவும் வழங்கப்பட்டது.
மேலும் இப்பிள்ளைகளுக்கு பாடசாலை சீருடை மற்றும் காலணிகளும் வழங்கப்பட்டதுடன் எட்டு மாணவர்களுக்கு மடிக் கணனிகளும் வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலக ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது