விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் மே 25ம் திகதி மீண்டும் டெல்லி சென்று தொடர் போராட்டத்தை நடத்துவோம் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14ம் திகத முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி மேற்கொண்ட பேச்சுவாத்தைகளை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அய்யாக்கண்ணு அறிவித்தார்.
இந்தநிலையில் நேற்றையதினம் தமிழகத்தில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்ற அய்யாக்கண்ணு செய்தி யாளர்களிடம் மேற்படி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் போராடி வந்த தமக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஆதரவு அளித் தனர் எனவும் அதனால்தான் மத்திய அரசு 15 நாட்களில் நல்ல முடிவை அறிவிக்க உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.