ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இலங்கை அவசர சந்திப்பு நடத்தியுள்ளது. இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்குவது குறித்து நாளை ஐரோப்பிய பாராளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வா, ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை வழங்குவது தொடர்பில் விரிவான ஆதரவு காணப்படுவதாகவும் ஒரு சில தரப்பினர் மட்டுமே எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகவும் இவ்வாறு எதிர்ப்பை வெளியிடும் தரப்பினருக்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து தெளிவூட்டப்பட்டுள்ளதாகவும் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். மேலும் நிச்சயமாக இலங்கைக்கு வரிச் சலுகைத் திட்டம் கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.