160
ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை வழங்க எதிர்ப்புத் தெரிவித்து முன்வைக்கப்பட்ட யோசனை இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது.
குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்ற நிலையில், இதற்கு எதிராக 436 வாக்குகளும், ஆதரவாக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், 22 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
Spread the love
1 comment
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை முழுமையாக செயல்படுத்தும் வரை ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் வழங்கக் கூடாது என்று 577 ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யாது, இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்க வேண்டும் என்று சுமந்திரனும் சம்பந்தனும் அரசாங்கத்துடன் சேர்ந்து பிரச்சாரம் செய்தனர். இதனால் இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டு அரசாங்கத்தின் மேல் உள்ள அழுத்தம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை முழுமையாக செயல்படுத்தப்படும் வாய்ப்புகளை தமிழர்கள் இழந்துவிடடார்கள் என்று நினைக்கின்றேன்.
இதை விட மிக சிறப்பாக அரசாங்கம் சார்பாக பிரச்சாரம் செய்த எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார். பொறுமையாகவும் பக்குவமாகவும் செயல்பட்ட சம்பந்தனும் பாராட்டப்பட்டார்.