187
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்தக்கோரியும், படையினரின் ஆக் கிரமிப்பில் உள்ள காணிகளை மீள வழங்ககோரியும் வடகிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் வகையில் வடமாகாணசபையில் 91ம் அமர்வு, நாலு நிமிடங்களில் இன்று ஒத்திவைக்கப்பட்டது.
வடமாகாணசபை தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் சபையை ஒத்திவைத்துள்ளது. இன்று காலை 10 மணிக்கு அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் சபை கூடியபோது அவை தலைவர் வடகிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. அதற்கு வடமாகாணசபை தனது பூரணமான ஆதரவை வழங்குகின்றது.எனவே இன்றைய தினம் மாகாணசபையின் 91ம் அமர்வை நாம் ஒத்தி வைக்கின்றோம் எனக் கூறி , 10 மணிக்கு கூடிய சபையை 10 மணி 4 நிமிடத்திற்கு ஒத்திவைத்தார்
Spread the love