166
சிரிய அகதி என்ற போர்வையில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த ஜெர்மன் படைச்சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். தென் ஜெர்மனியில் குறித்த படைச் சிப்பாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த படைச் சிப்பாய்க்கு ஒத்துழைப்பு வழங்கிய 22 வயதான மாணவர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
எனினும் கைது செய்யப்பட்ட படைச் சிப்பாய் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிரிய அகதி ஒருவரைப் போன்று தம்மை பதிவு செய்து கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்த இந்த நபர் முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love