அமெரிக்காவில் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 69 வயதான மருத்துவர் டேவிட் டோ என்பவருக்கு சிக்காகோ யுனைடெட் எயர் லைன்ஸ் விமான நிறுவனம் நட்டஈடு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிகமாக பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கிதனால் தெரிவுசெய்யப்பட்ட நால்வரை விமானத்தில் இருந்து வெளியேறச்சொன்ன நிலையில் நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டிஇருப்பதால் வெளியேற முடியாது என குறித்த வைத்தியர் தெரிவித்தமையினத் தொடா்ந்து அவர் வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றப்பட்டார்.
இது தொடர்பில் மருத்துவர் விமான நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தநிலையில் அவருக்கு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.