206
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை தொடர்பில், நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கு குற்றவாளிக்கு தகவல்கள் தெரியுமா ? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னேடுக்க ப்படவுள்ளது.ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவர் கொலை படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது இரு சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்கள் இருவரும் தம்மை வழக்கு விசாரணையின் போது காட்டி கொடுக்காது விட்டால் கண்கண்ட சாட்சியமான சிறுவனின் குடும்பத்திற்கு ஐந்து இலட்ச ரூபாய் பணம் தருவதாக சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள சிறுவனின் உறவினர் முறையான மகிந்தன் என்பவருடன் , பேரம் பேசியதாக கடந்த வழக்கு தவணையின் போது சிறுவனின் தாயாரால் நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு இருந்தது.
அது தொடர்பில் , விசாரணை நடாத்த அன்றைய தினம் நீதிவான் உத்தரவு இட்டு இருந்தார். அது தொடர்பிலான விசாரணை தொடர்பில் இன்றைய தினம் போலீசார் நீதிமன்றில் தெரிவிக்கையில் ,
குறித்த நபர் , சந்தேக நபர்கள் இருவரும் தன்னுடன் பேரம் பேசவில்லை எனவும் , சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த ஜெகன் என்பவர் குறித்த படுகொலை தொடர்பில் தனக்கு தகவல்கள் தெரியும் எனவும் , அதனை தான் நீதிமன்றில் கூறுவதற்கு தனக்கு ஐந்து இலட்சம் பணம் தருமாறும் சந்தேக நபர்களிடம் பேரம் பேசியதாக போலீசார் மன்றில் தெரிவித்தனர்.
அத்துடன் ஜெகன் எனும் நபர் நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கில் குற்றவாளியாக யாழ். மேல் நீதிமன்றம் கண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் எனவும் தெரிவித்து இருந்தனர். அதனை தொடர்ந்து குறித்த ஜெகன் எனும் நபரை எதிர்வரும் 12 ஆம் திகதி மன்றில் முற்படுத்துமாறு பதில் நீதிவான் உத்தரவு இட்டதுடன் வழக்கினையும் எதிர்வரும் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றின் போது குறித்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர் ஒருவர் தனக்கு ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை தொடர்பில் சில தகவல்கள் தெரியும் எனவும் , அதனை தான் ஊர்காவற்துறை நீதிமன்றில் தெரிவிக்க தயார் எனவும் மன்றில் தெரிவித்து இருந்தார்.
அதனை யடுத்து அது தொடர்பில் குறித்த நபர் ஊர்காவற்துறை நீதிமன்றில் சாட்சியமளிக்க ஏற்பாடு செய்யுமாறு நீதிபதி உத்தரவு இட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வழக்கின் பின்னணி
ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் பெண் படுகொலை செய்யப்பட்டார்.
குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் சகோதர்களான இரு நபர்கள் அன்றைய தினம் மாலை மண்டைதீவு சந்தியில் உள்ள ஊர்காவற்துறை காவல்துறையின் காவலரணில் கடமையில் இருந்த காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
Spread the love