Home இந்தியாஆந்திர மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்து – 13 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்து – 13 பேர் உயிரிழப்பு

by admin

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள்  தெரிவிக்கின்றன. இவர்களில் 8 பேரின் உடல்களை மீட்டுள்ளதாகவும், 5 பேரின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமம் ஒன்றில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற சிலர் அப்பகுதியில் உள்ள ஏரியில் படகு சவாரி மேற்கொண்ட போது அதிகம் பேர் படகில் ஏறியதனால் படகு  பாரம் தாங்காமல் கவிழ்ந்தது எனவும்  படகில் சவாரி  செய்த அனைவரும் தண்ணீருக்குள் விழுந்து மூழ்கினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியில் 2 குழந்தைகளை உயிருடன் மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More