180
நைஜீரியாவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இராணுவப் படையினர் சென்ற வாகனத் தொடரணி மீது மேற்கொள்ளப்பட்ட குறித்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் குறைந்தபட்சம் ஐந்து இராணுவப் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் நாற்பது படையினர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனமொன்றைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போகோ ஹாராம் தீவிரவாத அமைப்பின் தலைவர் Abu Mus’ab Al-Barnawi க்கு விசுவாசமான ஒருவரே இந்த தற்கொலைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
Spread the love