161
கிர்கிஸ்தானில் மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர் என உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து கிர்கிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கிர்கிஸ்தானின் மத்திய பகுதியில் நேற்று சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 9 குழந்தைகள் உட்பட 24 உயிரிழந்ததுடன். 20க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிர்கிஸ்தானின் சில பகுதியில் சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love