சூரிய சக்தியை சேமிக்கும் முறைமை ஒன்றை விஞ்ஞானிகள் அறிமுகம் செய்துள்ளனர். சூரிய சக்தியை சேமிப்பது மிகப் பெரிய சவாலாகவே காணப்பட்டு வந்தநிலையில் சுவீடன் விஞ்ஞானிகள் இந்த சவாலை வெற்றிகொண்டுள்ளனர்.
சாமேர்ஸ் பல்கலைக்கழக பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் இது தொடர்பில் ஆய்வு செய்துள்ளனர். செயற்கை மூலகங்களைப் பயன்படுத்தி சூரிய சக்தியை சேமிக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரசாயன திரவத்தில் சக்தியை சேமித்து வைக்க முடியும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
சூரிய ஒளியை அனைத்து நாடுகளினாலும் பார்க்க முடிவதாகவும் அனைவரினாலும் அதன் பயன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றால் அதுவே சக்தி வள ஜனநாயகம் எனவும் சாமேர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் பேராசிரியர் KASPER MOTH-POULSEN தெரிவித்துள்ளார்.