இந்தியா

சார்க் நாடுகளுக்கு செயற்கைக்கோள் பரிசு – நரேந்திர மோடி

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 5ம்திகதி விண்ணில் ஏவப்படும் 235 கோடி ரூபா மதிப்பிலான ‘தெற்காசிய செயற்கைக்கோள்’ சார்க் நாடுகளுக்கான பரிசு என இந்திய  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின்  3 ஆண்டுகள் உழைப்பில் தெற்காசிய செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது 50 மீட்டர் உயரம் 2,230 கிலோ எடை கொண்டதாகும். இதில் 12 கே.யு. டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த செயற்கைக்கோள் நேபாளம், பூடான், மாலத்தீவு, பங்களாதேஸ், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளுக்கு பரிசாக வழங்கப்பட உள்ளது. பாகிஸ்தான் மட்டும் இத்திட்டத்தில் இணையவில்லை. சார்க் நாடுகள் ஒவ்வொன்றுக்கும் செயற்கைக்கோளின் ஒரு டிரான்ஸ்பான்டர் ஒதுக்கப்பட உள்ளது. அதன்மூலம் தொலைத் தொடர்பு, தொலைக் காட்சி ஒளிபரப்பு, செயற்கைக் கோள் வழியிலான தொலைநிலைக் கல்வி, உள்ளிட்ட சேவைகளை வழங்க முடியும் எனவும்  சார்க் நாடுகளுக்கு இடையே தொலை பேசி வசதியையும் ஏற்படுத்த முடியும் எனவும் இதன்மூலம்  நிலநடுக்கம், புயல், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின்போது  தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply