கூட்டு எதிர்க்கட்சியினர் மீளவும் அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இவ்வாறு சவால் விடுத்துள்ளார். மே தினக் கூட்டத்தின் போது தங்களது கூட்டத்திற்கே அதிகளவு மக்கள் பங்கேற்றனர்கள் என ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கருதினால் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதபிதி மஹிந்த ராஜபக்ஸவும், கூட்டு எதிர்க்கட்சியினரும் அரசாங்கத்துக்கு விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டு காலி முகத் திடலில் பெருந்திரளான மக்களை அணி திரட்டியுள்ளதாகவும் அரசாங்கம் சவாலை ஏற்றுக்கொண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார். தேர்தலுக்கு அஞ்சவில்லை என்றால் அரசாங்கம் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.