ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிரச்சினைகள் காணப்படுவதாக கட்சியின் பொருளாளர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மே தினக் கூட்டத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சிக்கு வலுவான ஒர் அத்திவாரத்தை இடும் நடவடிக்கை மே தினத்தில் நடைபெற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் காலி முகத் திடலில் நடைபெற்ற கூட்டம் வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வான் பரப்பிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களே வெளியாகியிருப்பதாகவும் சுமார் இருபத்து ஐந்தாயிரம் முதல் முப்பதாயிரம் வரையிலான மக்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மைதானத்தில் பல்வேறு இடங்களில் இடைவெளி காணப்பட்டதாகவும் சில மாவட்டங்களில் மக்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ தேர்தலை கோரினாலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அவர்களினால் வெற்றியீட்ட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.