இலங்கை

எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாரியளவில் போராட்டம் நடத்தப்படும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாரியளவில் போராட்டம் நடத்தப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் இடம்பெறவுள்ள மிகப் பெரிய தொழிற்சங்க நடவடிக்கையாக இது அமையும் என சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரத்தில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.  ஆசிரியர்கள், தாதியர், இலங்கை போக்குவரத்துச் சபை உள்ளிட்ட 160 அரச துறைசார் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்த போராட்டம் நடத்தப்பட உள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply