165
காங்கேசன்துறை கடற்பரப்பில் படகு ஒன்றிலிருந்து கைதுசெய்யப்பட்ட 30 மியன்மார் நாட்டைச் சேர்ந்த ரோஹிஞ்சா இனத்தவர்களையும் மற்றும் படகோட்டிகளான இரண்டு இந்தியர்களையும், விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இவர்களை எதிர்வரும் 16ம் திகதி வரை மிரிஹான தடுப்பு அனுப்பி வைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்ட குறித்த குழுவில் ஏழு பெண்கள் மற்றும் சிறுவர்கள் 16 பேரும் அடங்குவதாகவும் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் அகதி முகாம் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love