ரஸ்யா மற்றும் ஜெர்மன் தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சுமூகமாக அமையவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ரஸ்யாவிற்கு பயணம் செய்துள்ள ஜெர்மன் அதிபர் என்ஜலா மோர்கல், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்துள்ளார்.
சிவில் உரிமைகளை உறுதி செய்தல், சிரிய விவகாரம் போன்ற தொடர்பில் ஜெர்மன் தொடர்ந்தும் ரஸ்யா மீது அதிருப்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ரஸ்யா ஏனைய நாடுகளின் தேர்தல்களில் தலையீடு செய்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரு நாடுகளின் தலைவர்களும் சந்திப்பு நடத்தியதன் பின்னர் ஊடகங்களிற்கு எதிரில் தோன்றிய போது அவர்களது முக பாவத்தின் மூலம் பிரச்சினை காணப்பட்டது என்பது உறுதியாகின்றது என ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.