Home இலங்கைஜனாதிபதிக்கும் வடக்கு முதல்வருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

ஜனாதிபதிக்கும் வடக்கு முதல்வருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

by admin


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் 17ம் திகதி இந்த விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாண முதலமைச்சரின் கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பிற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

பலவந்த காணாமல்  போதல்கள், தனியார் காணிகள் விடுவிக்கப்படாமை, வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாமை உள்ளிட்டன குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் வேறும் எவரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும் தனித்தனியாக இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More