இந்தியாவின் கொள்கைகள் அண்டை நாடுகளுக்கு சாதமாக அமையாது என ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் வெளிவிவகார மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அண்டை நாடுகளுக்கு சாதகமான வகையில் அமைவதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தியாவுடன் உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் போது மிகவும் நிதானத்துடன் கைச்சாத்திட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் இந்தியா அண்டை நாடுகள் குறித்து கவனம் செலுத்தாது எதேச்சாதிகார போக்கில் கருத்து வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு தனியாக தனித்து முன்னேற்றமடைய முடியாது எனவும் உறவுகளின் போது இரண்டு தரப்பிற்கும் நன்மை ஏற்படக்கூடிய வகையில் அமைய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இரு தரப்பு உறவுகள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய வகையில் அமையக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.