இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொண்ட மேலும் சிலர் பாராளுமன்றில் அங்கம் வகிக்கின்றார்கள் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்டதன் அடிப்படையில் கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டால், பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் மேலும் சிலருக்கும் அதே நிலைமை ஏற்படக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கீதா குமாரசிங்கவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக அவரினால், உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.