நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்யுமாறு ஜே.வி.பி. கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் ரத்து செய்யப்படும் எனும் வாக்குறுதியே ஜனாதிபதியின் பிரதான வாக்குறுதியாக அமைந்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். 19ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் சில அதிகாரங்கள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு கோரி போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.