Home இலங்கைஇலங்கையுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவிப்பு

இலங்கையுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவிப்பு

by admin

 
இலங்கையுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளை பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இலங்கையும் பாகிஸ்தானும் பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் அதிகளவு ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஸாந்த டி சில்வாவை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிராந்திய வலயத்தின் ஸ்திரத்தன்மையையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதற்கு இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து திருப்தி அடைவதாகவும்  பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More