மஹிந்த ராஜபக்ஸ , குரல் கொடுக்கும் ,ஜே.வி.பி. , பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்காக ஜே.வி.பி. குரல் கொடுத்துள்ளது. மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த மே தினக் கூட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட்டிருந்தால் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் இவ்வாறாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 45 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.