159
அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகள் களையப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொது இடங்களில் ஒரு அமைச்சரை மற்றுமொரு அமைச்சர் விமர்சனம் செய்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன மற்றும் ராஜித சேனாரட்ன ஆகியோரு ஒருவரை ஒருவர் பகிரங்கமாக சாடிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அமைச்சர்கள் பகிரங்கமாக முரண்பட்டுக் கொள்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி இவ்வாறான முரண்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்தின் முன்நகர்வுகளை தடுக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love