பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டால் நீதிமன்றின் உதவி நாடப்படும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களது உறுப்புரிமை நீக்கப்பட்டால், அது தொடர்பில் வழக்குத் தொடரப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் தம்மையோ அல்லது வேறு உறுப்பினர்களையோ பாராளுமன்றிலிருந்து வெளியேற்ற எவருக்கும் உரிமை கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக இதுவரையில் எவரும் அறிவிக்கவில்லை எனவும் ஏதேனும் காரணத்திற்காக பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டால் தாம் நீதிமன்றின் உதவியை நாடுவதாகத் தெரிவித்துள்ளார்.