தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழுவை, பாரத பிரதமர் நரேந்திர மோடி, டிக்கோய பொதுக்கூட்டத்துக்கு முன் தனியாக சந்தித்து உரையாட உள்ளார். இந்த சந்திப்பின் போது, 2015ம் ஆண்டில் முதன் முறையாக பிரதமர் மோடி இலங்கை வந்தபோது, தமது கூட்டணியுடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்தொடர்ச்சி பற்றியும், இடைக்காலத்தில் இருமுறை இலங்கை வந்தபோது எம்மை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகள் பற்றியும் கலந்து ஆராயப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்திப்பார் – மனோ கணேசன்
256
Spread the love