விளையாட்டு

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதனை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது

ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமது நாட்டு அணி பங்கேற்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை இன்று உறுதிப்படுத்தியுள்ளது.  கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட வருமானப் பங்கீடு தொடர்பான முரண்பாட்டினை அடுத்து, சம்பியன்ஸ் கிண்ண தொடரில் பங்கேற்பது குறித்த தனது சந்தேக நிலைமையை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வெளிப்படுத்திவந்தது.

இந்த நிலையில், சம்பியன்ஸ் தொடரில் பங்கேற்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக் கூட்டம் இன்று நடைபெற்றிருந்தது.

இந்தக் கூட்டத்தினையடுத்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்திய கிரிக்கெட் அணியின் பங்கேற்புக் குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு, அணி விபரம் நாளை திங்கட் கிழமை வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply