அமெரிக்க ராணுவம் போரில் பயன்படுத்திய மிகப்பெரிய அணு வெடிகுண்டுக்கு, அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய் என பெயரிட்டமைக்கு புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அந்த பெயரை கேட்ட போது தான் மிகவும் கேவலமானதாக உணர்ந்ததாக வத்திகானில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது பாப்பாண்டவர் தெரிவித்துள்ளார்.
ஒரு தாய் உயிர் மட்டுமே கொடுப்பார் எனவும் எனினும் இது மரணத்தை மட்டுமே கொடுக்கின்ற இந்தக் குண்டை தாய் என அழைக்கின்றோம் எனவும் கவலை வெளியிட்டுள்ள அவர் உலகில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என கேள்வியும் எழுப்பியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ எஸ் தீவிரவாதிகள் மீது கடந்த மாதம் சுமார் 9,800 கிலோ நிறையுடைய குண்டு ஒன்றை வீசிய அமெரிக்கா அந்தக்குண்டுக்கு அனைத்து குண்டுகளுக்கும் மேலான தாய் என பெயரிட்டமை குறிப்பிடத்தக்கது.