தன்னை விடவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் தற்போது நல்ல பாதுகாப்பு நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இவ்வாறான ஓர் நிலையில் தம்மை விடவும் மஹிந்தவிற்கு எதற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான அச்சுறுத்தல்கள் காணப்பட்ட காலத்திலும் தமது பாதுகாப்பினை மஹிந்த முழுமையாக நீக்கியிருந்தார் என குற்றம் சுமத்தியுள்ள அவர் கடந்த 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இரண்டு மாதங்களுக்கு தமக்கு எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாடுகள் சிலவும், ஐக்கிய தேசியக் கட்சியினரும் கோரியதனைத் தொடர்ந்தே தமக்கு 40 பேரைக் கொண்ட பாதுகாப்புப் பிரிவு வழங்கப்பட்டது என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.