Home விளையாட்டுஇந்திய அணியில் மீளவும் விளையாட இடம் கிடைக்கும் என ஹர்பஜன் நம்பிக்கை

இந்திய அணியில் மீளவும் விளையாட இடம் கிடைக்கும் என ஹர்பஜன் நம்பிக்கை

by admin


இந்திய தேசிய அணியில் மீளவும் விளையாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரில் தமக்கு விளையாட சந்தர்ப்பம் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சாம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடருக்கான இந்திய அணி இன்றைய தினம் தெரிவு செய்யப்பட உள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் ஹர்பஜன் தனது 37ம் வயதை பூர்த்தி செய்ய உள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஹர்பஜன் இறுதியாக இந்திய அணியின் சார்பில் சர்வதேச ஒருநாள் போட்டியொன்றில் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் மீள இடம்பிடிப்பதற்கான தகுதி தம்மிடம் காணப்படுவதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் பங்கேற்று வரும் ஹர்பஜன் ஒன்பது போட்டிகளில் 8 விக்கடடுக்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More