இலங்கை

இரண்டு வெளிநாட்டு தூதுவர்களும் இரண்டு உயர்ஸ்தானிகர்களும் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

புதிதாக இலங்கைக்கு நியமனம் பெற்ற இரண்டு தூதுவர்களும், இரண்டு உயர்ஸ்தானிகர்களும் இன்று (08) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர்.

நேபாளம் மற்றும் இந்தோனேசிய தூதுவர்களும் மோல்டா இராச்சியம் மற்றும் நியுசிலாந்து உயர்ஸ்தானிகர்களுமே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளனர்.

இலங்கைக்கும் மேற்குறித்த நாடுகளுக்குமிடையில் நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு புதிதாக நியமிக்கப்பட்ட இராஜதந்திரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என தான் நம்புவதாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி உலகிலுள்ள அனைத்து நாடுகளுடனும் இருக்கும் நட்புறவை பலமான அணுகுமுறையுடன் முன்னெடுத்து, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அவ்வாறான அனைத்து நாடுகளினதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது தற்போதைய அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையாகும் எனவும் குறிப்பிட்டார்

Add Comment

Click here to post a comment

Leave a Reply