165
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இளைய சகோதரி விசித்திரா ராஜபக்ஜ ரனவக்க காலமானார். நோய் காரணமாக விசித்திரா உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விசித்திரா, இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் பிள்ளையின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. மிரிஹான பிரதேசத்தில் நாளை இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love