முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு குறித்து மனு எதனையும் தாக்கல் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஓர் அரச சார்பற்ற நிறுவனமே சந்திரிக்காவின் பாதுகாப்பு குறித்து மனுவொன்றை உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தது என குற்றம் சுமத்தியுள்ள அவர் தாம் மனுவொன்றை தாக்கல் செய்ததாக சுமத்திய குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என குறிப்பிட்டுள்ளார்.
தாமோ, ஜனாதிபதி செயலகமோ அல்லது பாதுகாப்புச் செயலகமோ மனு எதனையும் தாக்கல் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய சந்திரிக்காவிற்கு பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.