இந்திய எல்லைக்குட்பட்ட ஜம்மு-காஷ்மீரில் சுமார் 200 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர் என அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஓராண்டில் 95 இளைஞர்கள் தீவிரவாத அமைப்புகளில் இணைந்துள்ளனர் எனவும் அவர்களையும் சேர்ந்து மாநிலம் முழுவதும் சுமார் 200 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனர் எனவும் அவர்களில் 110 பேர் காஷ்மீர் இளைஞர்கள் என்பதுடன் ஏனையவர்கள்; வெளிநாட்டினர் எனவும் மாநில காவல்துறை மாஅதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் கல்வீச்சு சம்பவங்களைத் தடுக்க சமூக வலைதளங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் வன்முறை குறைந்தவுடன் அந்த தடை நீக்கப்படுமெனவும் தெரிவித்துள்ள அவர் மேலும் தீவிரவாதத்தை தூண்டிவிட்ட குற்றச்சாட்டின்பேரில் 22 இணையதளங்கள் முடக்கப் பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.