ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைவதனை தான் விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான காரியாலயத்தினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி பிளவடைவதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும் அதற்காக கொலையாளிகள், மோசடிகாரர்கள் கட்சிக்கு தலைமை தாங்குவதனை அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியை தூய்மைப்படுத்தும் நோக்கிலேயே மக்கள் வாக்களித்தனர் என குறிப்பிட்டுள்ள அவர் கொலையாளிகள், கள்வர்கள், கொள்ளையர்கள், மோசடிகாரர்கள் கட்சியை விட்டு விலகிச் செல்வதனால் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை எனவும் அவ்வாறானவர்கள் வெளியேறுவதனால் கட்சிக்கு நன்மையே ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.