இலங்கை

ஒற்றுமையுடன் முன்னோக்கி நகருமாறு ஜனாதிபதி அமைச்சர்களுக்கு ஆலோசனை


ஒற்றுமையுடன் முன்னோக்கி நகருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். குறிப்பாக அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன மற்றும் ராஜித சேனாரட்ன ஆகியோருக்கு இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது குறித்து ஆலோசனை வழங்கியுள்ள ஜனாதிபதி ஆளும் கட்சியின் ஒற்றுமையைப் பேண வேண்டியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இரண்டினதும் கடமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை இழுத்துக் கொண்டு செல்லாது அவற்றை தீர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் அமைச்சரவையை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அனைத்து அமைச்சர்களுக்கும் உண்டு எனவும் ஜனாதிபதி  சுட்டிக்காட்டியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply