பிரேஸில் முன்னாள் ஜனாதிபதி டுரணை Luiz Inácio Lula da Silva நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். ஊழல் மோசடிகள் குறித்த வழக்கு ஒன்றின் விசாரணைகளுக்காக அவர் இவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளன.
பிரேஸிலின் 100 அரசியல்வாதிகளுக்கு எதிராக கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி Luiz Inácio Lula da Silva க்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுதலை செய்தால் எதிர்வரும் 2018ம் ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.