கொசோவோவில் எதிர்வரும் ஜூன் மாதம் 11ம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதி ஹாசிம் தாச்சி ( Hashim Thaci) இது தொடர்பில் அறிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றின் மூலம் நாட்டின் அரசாங்கம் கலைக்கப்பட்ட நிலையில் இவ்வாறு தேர்தலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பிரதமர் இசா முஸ்தபாவின் அரசாங்கமே இவ்வாறு கலைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளநிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 11ம் திகதி முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. 2008ம் ஆண்டு சுதந்திரம் பெற்றுக் கொண்டதன் பின்னர் மூன்றாவது தடவையாக தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.