பௌத்த மதக் கொள்கைகளின் ஊடாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வலுவான பொருளாதாரம், சமனிலையான நீதிக்கட்டமைப்பு மற்றும் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களிடையேயும் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். உலகப் பிரச்சினைகளுக்கு பௌத்த தர்ம கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளின் மூலம் உலக சமூகத்திற்கு தேரவாத பௌத்தம் பற்றி அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.