176
சூடான் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சூடான் பிரதமர் ஹசன் சல்லா ( Hassan Salih ) அமைச்சரவை மாற்றத்தை அறிவித்துள்ளார். பொருளாதாரதுறை சார் அமைச்சர்கள், எரிபொருள், முதலீடு மற்றும் நிதி அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சூடானின் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் மாதம் முதலே சூடானில் பிரதமர் ஆட்சி முறைமை அறிமுகம் செய்யப்பட்டது. ஜனாதிபதியின் அதீதமான நிறைவேற்று அதிகாரத்தை குறைக்கும் நோக்கில் இவ்வாறு அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
Spread the love