178
வடகொரியா மற்றுமொரு ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடகொரியாவின் மேற்கு கரையோரப் பகுதியில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தென்கொரிய இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பான் கடற்பரப்பில் இந்த ஏவுகணை வெடித்துச் சிதறியதாக ஜப்பான் தகவல் வெளியிட்டுள்ளது.
வடகொரியா இந்த ஆண்டில் பல ஏவுகணைகளை பரிசோதனையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை சர்வதேச ரீதியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் அமெரிக்காவுடன் பகைமையை அதிகரித்துள்ளது. வடகொரியாவின் அண்மைய ஏவுகணை பரிசோதனைக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
Spread the love