172
அதிகளவு வெடி பொருட்கள் வைத்திருந்த இரண்டு மாவோயிஸ்டுகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தின் சர்கா பத்தார் காவல் நிலைய எல்லைக்குள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை வழங்கிய தகவலின் படி குறித்த ; இரண்டு மாவோயிஸ்டுகளும் சுற்றி வளைக்கப்பட்டனர் எனவும் கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் அதிகளவு ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் ஏராளமான நக்சல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் காவல்துறைதரப்பு தெரிவித்துள்ளது.
Spread the love